Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்ச்சி மாணவர்களுக்கு இலவச பயிற்சி

யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்ச்சி மாணவர்களுக்கு இலவச பயிற்சி

யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்ச்சி மாணவர்களுக்கு இலவச பயிற்சி

யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்ச்சி மாணவர்களுக்கு இலவச பயிற்சி

ADDED : ஜூலை 13, 2024 12:23 AM


Google News
சென்னை,

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, 'வெராண்டா' ஐ.ஏ.எஸ்., முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 25 மாணவர்களுக்கு 100 சதவீத ஸ்காலர்ஷிப் உதவியுடன் பயிற்சி வழங்க உள்ளது.

பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு தங்குமிடம், உணவு, தொழில்முறை வழிகாட்டுதல் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும்.

25 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட இருப்பதால் தகுதியான மாணவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் என, வெராண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பரத் சீமான் கூறியதாவது:

நாட்டிற்கு சேவை செய்ய தகுதியுள்ள, திறமையான இளைய சமுதாயத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம். சிவில் சர்வீஸ் முதன்மை மற்றும் பெர்சனாலிட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், தங்கள் இலக்கை எளிதாக அடைய, இத்திட்டம் உதவும்.

விபரங்களுக்கு 98401 43199 என்ற மொபைல் போன் எண், academics@verandaias.com என்ற மின்னஞ்சலில் அறியலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us