/உள்ளூர் செய்திகள்/சென்னை/ எஸ்.ஆர்.எம்.,மில் சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் எஸ்.ஆர்.எம்.,மில் சர்வதேச பிடே ரேட்டிங் செஸ்
எஸ்.ஆர்.எம்.,மில் சர்வதேச பிடே ரேட்டிங் செஸ்
எஸ்.ஆர்.எம்.,மில் சர்வதேச பிடே ரேட்டிங் செஸ்
எஸ்.ஆர்.எம்.,மில் சர்வதேச பிடே ரேட்டிங் செஸ்
ADDED : ஜூலை 13, 2024 12:22 AM
சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலை, ஸ்ரீ ராகவேந்திரா செஸ் அகாடமி மற்றும் மாஸ்டர் மைண்டு செஸ் அகாடமி இணைந்து, 'சேர்மன்' கோப்பைக்கான 2வது சர்வதேச பிடே ரேட்டிங் மற்றும் ராபிட் செஸ் போட்டியை, இன்று நடத்துகின்றன.
போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் உள்ள தியான் சந்த் உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. 'ஓபன்' முறையில் நடக்கும் இப்போட்டியில், 450க்கு மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.
காலை, 9:00 மணிக்கு முதல் சுற்றில் துவங்கி, மாலை 4:30 மணிவரை எட்டு சுற்றுகளாக நடக்கின்றன.
மொத்தம், 104 பேருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
போட்டியின் மொத்த பரிசுத்தொகையாக, 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது.