/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருக்கோவில் தொழிலாளர் சங்க புது கிளை வரும் 27ல் துவக்கம் திருக்கோவில் தொழிலாளர் சங்க புது கிளை வரும் 27ல் துவக்கம்
திருக்கோவில் தொழிலாளர் சங்க புது கிளை வரும் 27ல் துவக்கம்
திருக்கோவில் தொழிலாளர் சங்க புது கிளை வரும் 27ல் துவக்கம்
திருக்கோவில் தொழிலாளர் சங்க புது கிளை வரும் 27ல் துவக்கம்
ADDED : ஜூலை 25, 2024 01:24 AM

வியாசர்பாடி, தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் சங்கத்தின் சென்னை கோட்டம் சார்பில், 'புதிய கிளை திட்டமிடுதல்' குறித்த நிர்வாகிகளின் சிறப்பு கலந்தாலோசனை கூட்டம், சூளை, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. சென்னை கோட்ட கொள்கை பரப்பு செயலர் கந்தகோட்டம் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
இதில், வரும் 27ம் தேதி கே.கே.நகரில் நடைபெறும், சங்கத்தின் 9வது கிளையான மதுரவாயல் விருகம்பாக்கம் புதிய கிளை துவக்க விழாவை, சிறப்பாக நடத்துவது மற்றும் சென்னையில் உள்ள அனைத்து கோவில்களில் இருந்தும் பணியாளர்கள் பெரும் திரளாக கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், கோவிலில் மூன்றாண்டுகள் பணிபுரிந்து வரும் தற்காலிக தொகுப்பு ஊதிய ஊழியர்கள் மற்றும் அன்னதானப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; கோவில் பணியாளர்களுக்கு கோவில் அருகிலேயே பணியாளர் குடியிருப்பு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், மாநில மகளிர் அணி செயலர் செந்தமிழ்ச்செல்வி, உயர்மட்ட குழு உறுப்பினர் முத்துசாமி, சென்னை கோட்ட தலைவர் தனசேகர் உள்ளிட்ட கிளை அமைப்பாளர்கள், மகளிர் அணியினர் திரளான பங்கேற்றனர்.
தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் யூனியனின் சென்னை கோட்டம் சார்பில் 'புதிய கிளை திட்டமிடுதல்' குறித்த நிர்வாகிகளின் சிறப்பு கலந்தாலோசனை கூட்டம் சூளை, அருள்மிகு அங்காளபரமேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.