/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பைக் திருடும் மர்மநபர்கள் அமைந்தகரையில் பீதி பைக் திருடும் மர்மநபர்கள் அமைந்தகரையில் பீதி
பைக் திருடும் மர்மநபர்கள் அமைந்தகரையில் பீதி
பைக் திருடும் மர்மநபர்கள் அமைந்தகரையில் பீதி
பைக் திருடும் மர்மநபர்கள் அமைந்தகரையில் பீதி
ADDED : ஜூலை 25, 2024 01:23 AM

அமைந்தகரை, அமைந்தகரை, வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் குகனேஷ், 27; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 20ம் தேதி வழக்கம்போல இரவு பணி முடிந்து, வீட்டின் வாசலில் தன் 'பஜாஜ் பல்சர்' பைக்கை நிறுத்தி சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் காலை வந்து பார்த்தபோது, பைக் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, மர்மநபர்கள் இருவர், அதிகாலை 3:20 மணிக்கு பைக்கை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இது குறித்து குகனேஷ் அமைந்தகரை போலீசில், சிசிடிவி கேமரா காட்சி பதிவுடன் புகார் அளித்தார். போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.