/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மாயம் பணியை முடிக்க தேடும் அதிகாரிகள் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மாயம் பணியை முடிக்க தேடும் அதிகாரிகள்
டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மாயம் பணியை முடிக்க தேடும் அதிகாரிகள்
டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மாயம் பணியை முடிக்க தேடும் அதிகாரிகள்
டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மாயம் பணியை முடிக்க தேடும் அதிகாரிகள்
ADDED : ஜூலை 13, 2024 12:37 AM

சென்னை,சென்னை மாநகராட்சி எல்லையை ஒட்டி, புழல் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது. புழல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம், மாதவரம் மண்டல எல்லையில் இயங்கி வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றியத்தை, சென்னை மாநகராட்சியுடன் இணைப்பதற்கான ஆரம்பகட்ட பணி நடந்து வருகிறது.
இங்குள்ள கிராண்ட்லைன் ஊராட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. குடியிருப்புகள், சிறு தொழில் நிறுவனங்கள், வர்த்தக பகுதிகள், பெருகி வருகின்றன. எனவே, இப்பகுதிகளில் சாலை கட்டமைப்பை மேம்படுத்த, நடப்பு 2024-25ம் ஆண்டு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், பல கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிதியில் தார், கான்கிரீட், பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை தனித்தனியாக வழங்காமல், ஒருவருக்கே பேக்கேஜ் டெண்டராக, ஊரக வளர்ச்சித் துறை வழங்கியுள்ளது.
பேக்கேஜ் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், சில சாலை பணிகளை செய்துவிட்டு, அதற்கான பில் தொகையையும் பெற்றுவிட்டார்.
எஞ்சிய பணிகளுக்கு மட்டுமே பில் பெற வேண்டியுள்ளது. ஆனால், பணிகளை முடிக்காமல் ஒப்பந்ததாரர் திடீரென மாயமாகிவிட்டார்.
இதனால், சாலை பணிகள் இரண்டு மாதங்களாக அரைகுறையாக நிற்கிறது.
அரைகுறையாக போடப்பட்ட சாலைகளுக்கு அதிக நிதி செலவழிக்கப்பட்டு உள்ளது. திட்ட செலவு தொடர்பான தகவல், விதிப்படி புதிய சாலைகளுக்கு அருகே வைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள தொகை, பொதுமக்களுக்கு தெரியாமல் இருப்பதற்கு, கான்கிரீட் போட்டு மூடப்பட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரைகுறையாக நிற்கும் பணிகளை முடிக்க வழிதெரியாமல், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவதற்குள், ஒப்பந்ததாரரை தேடி பிடிக்கும் முயற்சியில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.