ஓட்டை நிழற்குடை மழை, வெயிலில் அவதி
ஓட்டை நிழற்குடை மழை, வெயிலில் அவதி
ஓட்டை நிழற்குடை மழை, வெயிலில் அவதி
ADDED : ஜூலை 25, 2024 01:22 AM

அமைந்தரையில், நெல்சன் மாணிக்கம் சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது. சூளைமேடு, கல்லுாரி சாலை, எழும்பூர், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பேருந்துகள், இங்கிருந்து பயணியரை ஏற்றிச் செல்கின்றன. இந்த நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை பல ஆண்டுகளாக சேதமடைந்து ஓட்டையாக காட்சியளிக்கிறது. இதனால் மழையில் நனைந்து, வெயிலில் காயும் நிலைக்கு பயணியர் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிழற்குடையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
பழனி மாணிக்கம், அமைந்தகரை.