/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பொது சுகாதார அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கைது பொது சுகாதார அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கைது
பொது சுகாதார அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கைது
பொது சுகாதார அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கைது
பொது சுகாதார அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கைது
ADDED : ஜூலை 26, 2024 12:13 AM
சென்னை,சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தை முற்றுகையிட்டு, பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
போலீசாரின் முன் அனுமதி பெறாமல், டி.எம்.எஸ்., வளாகத்துக்குள் நுழைய முயன்றதாகக் கூறி, 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் செயலர் லெட்சுமி நாராயணன் கூறியதாவது:
கொரோனா மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளித்து, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதன்படி, 1,002 சுகாதார ஆய்வாளர் நிலை 1 மற்றும் 2,715 சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களுக்கான கருத்துருக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதில், குழப்பத்தை ஏற்படுத்தும் அரசாணை 337, 338ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
மேலும், மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மாத ஊதியத்தை, 20,000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றோம். எங்களை அழைத்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் பேசி, தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.