/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வேங்கைவாசல் சித்தேரியில் கழிவுநீர் கலப்பு வேங்கைவாசல் சித்தேரியில் கழிவுநீர் கலப்பு
வேங்கைவாசல் சித்தேரியில் கழிவுநீர் கலப்பு
வேங்கைவாசல் சித்தேரியில் கழிவுநீர் கலப்பு
வேங்கைவாசல் சித்தேரியில் கழிவுநீர் கலப்பு
ADDED : ஜூலை 25, 2024 12:54 AM

சேலையூர், சேலையூர் அடுத்த வேங்கைவாசல் சித்தேரி, 20 ஏக்கர் பரப்பளவு உடையது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியினர் பங்களிப்புடன், ஏரி துார்வாரி சீரமைக்கப்பட்டது.
அதன்பின் பெய்த மழையால் ஏரி நிரம்பியது.
தற்போது, சந்தோஷபுரம் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து வருவதால், தண்ணீர் மாசடைகிறது.
தவிர, ஆகாயத்தாமரை வளர்ந்து மூடிவிட்டது. போக்கு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுதுமாக துார்வாராமல், பெயருக்காக துார்வாரி உள்ளனர்.
கழிவுநீர் கலப்பதை தடுத்து, வேங்கைவாசல் சித்தேரியை பழயைபடி மீட்க, பொதுப்பணி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.