/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குழந்தை உட்பட இருவர் சாலை விபத்தில் பலி குழந்தை உட்பட இருவர் சாலை விபத்தில் பலி
குழந்தை உட்பட இருவர் சாலை விபத்தில் பலி
குழந்தை உட்பட இருவர் சாலை விபத்தில் பலி
குழந்தை உட்பட இருவர் சாலை விபத்தில் பலி
ADDED : ஜூலை 14, 2024 12:34 AM
திருத்தணி, ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்தவர் அனில், 32. இவருக்கு அஞ்சலி, 27, என்ற மனைவியும், சூர்யா, 3, என்ற மகனும் உள்ளனர்.
சூர்யாவிற்கு உடல்நலம் சரியில்லாததால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, அனில் தன் காரில், மனைவி, குழந்தையுடன் நேற்று காலை சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.
உறவினர் பாஸ்கர் என்பவர் கார் ஓட்டினார்.
திருத்தணி அடுத்த, லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, எதிரே வந்த சரக்கு ஆட்டோ, கார் மீது மோதியதில், பயணம் செய்த ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சூர்யா, சிகிச்சை பலனின்றி இறந்தது. கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், செங்குன்றம் அடுத்த காந்தி நகரைச் சேர்ந்தவர் அருண் மனைவி காயத்ரி, 44. நேற்று காலை, கணவருடன் செங்குன்றத்தில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி, 'ராயல் என்பீல்ட் புல்லட்' வாகனத்தில் சென்றார்.
சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, பெரவள்ளூர் அருகே, பின்னால் வந்த லாரி டூ-- வீலர் மீது மோதியது. தடுமாறி சாலையில் விழுந்த காயத்ரி மீது லாரி ஏறியதில், அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.