ADDED : செப் 24, 2025 12:57 AM

சென்னை : மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த, 35 கடைகளை மாநகராட்சி பணியாளர்கள் நேற்று அகற்றினர்.
சென்னையின் சுற்றுலா தலமான மெரினா கடற்கரைக்கு, ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அங்கு உழைப்பாளர் சிலை அருகே நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது, சுற்றுலா பயணியருக்கு இடையூறாக உள்ளதாக பல்வேறு தரப்பில் புகார்கள் எழுந்தன. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி, காவல் துறையினர், மாநகராட்சியிடம் வலியுறுத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து, உழைப்பாளர் சிலை அருகே நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த, 35 கடைகளை நேற்று, மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.