/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராடிய மணலி மக்கள் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராடிய மணலி மக்கள்
சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராடிய மணலி மக்கள்
சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராடிய மணலி மக்கள்
சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராடிய மணலி மக்கள்
ADDED : செப் 24, 2025 12:55 AM

மணலி : ஆறு ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ள மணலி பெரியார் நகர் சாலையை சீரமைக்கக்கோரி, அப்பகுதி மக்கள், நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
மணலி பெரியார் நகரில், 'சிடெக்ஸ்' என்னும் கெமிக்கல் தயாரிக்கும் தொழிற்சாலை, 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்குள்ள சாலைகள், இந்த தொழிற்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஆறு ஆண்டுகளாக, அங்குள்ள சாலைகள் சீரமைக்கப்படவில்லை.
சாலைகள் குண்டும் குழியுமாகி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடந்த நிலையில், மழை நேரத்தில் சாலைகள் சகதியாக மாறிவிடுகின்றன.
இதனால், சாலையில் மக்கள் நடந்து செல்லவும், வாகனத்தில் செல்லவும் முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
சாலையை சீரமைத்து தரக்கோரி, அப்பகுதி மக்கள், மாநகராட்சி யிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று, சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த, மணலி போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
'சிடெக்ஸ்' தொழிற்சாலை நிர்வாகம், சாலை சீரமைக்க ஆட்சேபனை இல்லை என்று, மாநகராட்சிக்கு சான்றிதழ் வழங்கினால், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் சேதம் அடைந்த சாலையை ஒரு மாதத்திற்குள் சீரமைத்து தருவதாக, அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதையடுத்து, அப் பகுதி மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.