ADDED : செப் 24, 2025 02:54 AM

ஐ.சி.எப்., : vநான்கு மாதங்களாக தலைமறைவாக இருந்தவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
ஐ.சி.எப்., காவல் நிலைய எல்லையில் 2022ல் ஒரு கடையின் பூட்டை உடைத்து, திருடிய வழக்கில் கொடுங்கையூரை சேர்ந்த மனோஜ், 22, என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வெளிவந்த அவர், மீண்டும் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து கடந்த ஜூன் 19ல் அவர் மீது பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
நான்கு மாதங்களாக தலைமறைவாக இருந்த மனோஜை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.