/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுவனை பிச்சை எடுக்க வைத்து அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு வலை சிறுவனை பிச்சை எடுக்க வைத்து அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு வலை
சிறுவனை பிச்சை எடுக்க வைத்து அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு வலை
சிறுவனை பிச்சை எடுக்க வைத்து அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு வலை
சிறுவனை பிச்சை எடுக்க வைத்து அத்துமீறலில் ஈடுபட்டவருக்கு வலை
ADDED : செப் 24, 2025 02:57 AM
சென்னை : ரயில்வே இடத்தில், 12 வயது சிறுவனை பிச்சை எடுக்க வைத்து, பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஐ.சி.எப்., ரயில்வேக்கு சொந்தமான இடத்தில், சிறுவன் ஒருவன் பிச்சை எடுத்து வந்துள்ளான். இதை பார்த்த ரயில்வே போலீசார், சிறுவனை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் என்பதும், அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படிப்பதும் தெரிய வந்தது. மேலும், இவரது தாய், தந்தை பிரிந்த நிலையில், பாட்டியின் ஆதரவில் வளர்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வாலிபர் ஒருவர் சிறுவனை மிரட்டி கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைத்து வசூலில் ஈடுபட்டுள்ளார்.
அதேபோல, சிறுவனிடம் வலுக்கட்டாயமாக பல மாதங்களாக பாலியல் ரீதியாகவும் அத்துமீறலில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தைகள் நல அலுவலர்கள், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசில் சிறுவனை ஒப்படைத்து, நேற்று புகார் அளித்தனர்.
சிறுவனிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.