/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மேலும் ஒரு துாய்மை பணியாளர் உடல்நல குறைவால் 'அட்மிட்' மேலும் ஒரு துாய்மை பணியாளர் உடல்நல குறைவால் 'அட்மிட்'
மேலும் ஒரு துாய்மை பணியாளர் உடல்நல குறைவால் 'அட்மிட்'
மேலும் ஒரு துாய்மை பணியாளர் உடல்நல குறைவால் 'அட்மிட்'
மேலும் ஒரு துாய்மை பணியாளர் உடல்நல குறைவால் 'அட்மிட்'
ADDED : டிச 01, 2025 01:22 AM

அம்பத்துார்: உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும், மேலும் ஒரு துாய்மை பணியாளர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பத்துாரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில், திரு.வி.க., நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் பணியாற்றிய நான்கு பெண் துாய்மை பணியாளர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், திரு.வி.க., நகர் மண்டலத்தைச் சேர்ந்த ஜெனோவா, 52, என்கிற பெண் துாய்மை பணியாளர், நேற்று முன்தினம் உடல்நிலை மோசமடைந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், போராட்டத்தின் 14வது நாளான நேற்று, ராயபுரம் மண்டலத்தைச் சேர்ந்த பாரதி, 39, என்கிற பெண் துாய்மை பணியாளரும், உடல்நிலை மோசமடைந்து மயங்கினார்.
உழைப்போர் உரிமை இயக்கத்தினர், பாரதியை படுத்திருந்த பாயுடன் சேர்த்து துாக்கி ஆம்புலன்சில் ஏற்றினர். அவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மற்ற இரண்டு பெண் துாய்மை பணியாளர்கள் உண்ணா விரத போராட்டத்தை தொடர்கின்றனர்.


