/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முதல்வர் குறித்து அவதுாறு பேசிய பா.ஜ., நிர்வாகி கைது முதல்வர் குறித்து அவதுாறு பேசிய பா.ஜ., நிர்வாகி கைது
முதல்வர் குறித்து அவதுாறு பேசிய பா.ஜ., நிர்வாகி கைது
முதல்வர் குறித்து அவதுாறு பேசிய பா.ஜ., நிர்வாகி கைது
முதல்வர் குறித்து அவதுாறு பேசிய பா.ஜ., நிர்வாகி கைது
ADDED : செப் 24, 2025 02:58 AM
சென்னை : முதல்வர் குறித்து அவதுாறாக பேசிய பா.ஜ., நிர்வாகியை, போலீசார் கைது செய்தனர்.
ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடு உள்ளது. நேற்று முன்தினம் முதல்வர் வீட்டிற்குள் உள்ள முகாம் அலுவலகத்திற்கு, மர்மநபர் ஒருவர் மதுபோதையில் தொடர்பு கொண்டு போனில் பேசி உள்ளார்.
அப்போது அவர், முதல்வர் குறித்து அவதுாறாகவும், அநாகரிகமாகவும் பேசி, இணைப்பை துண்டித்துள்ளார்.
இது குறித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
இதில், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர், 65, என்பதும், தோணிக்கரை பா.ஜ., கிளை தலைவராக இருப்பதும் தெரிய வந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.