/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னை, செங்கை வீரர்கள் மாநில செஸ்சில் முன்னிலை சென்னை, செங்கை வீரர்கள் மாநில செஸ்சில் முன்னிலை
சென்னை, செங்கை வீரர்கள் மாநில செஸ்சில் முன்னிலை
சென்னை, செங்கை வீரர்கள் மாநில செஸ்சில் முன்னிலை
சென்னை, செங்கை வீரர்கள் மாநில செஸ்சில் முன்னிலை
ADDED : ஜூன் 20, 2025 12:26 AM

சென்னை, மாநில அளவிலான பிடே ரேட்டிங் செஸ் போட்டியில், நேற்று வரை நடந்த மூன்று சுற்றுகள் முடிவில், சென்னை, செங்கல்பட்டு வீரர் - வீராங்கனையர் முன்னிலையில் உள்ளனர்.
தமிழக மாநில செஸ் சங்கம் ஆதரவில், செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்கம் சார்பில், மாநில அளவிலான பிடே ரேட்டிங் செஸ் போட்டி, மேல்மருவத்துாரில் உள்ள ஆதிபராசக்தி இன்ஸ்டிடியூட்டில் துவங்கியது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உட்பட, மாநிலம் முழுதும் இருந்து, 160 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.
ஐந்து நாட்கள் நடக்கும் இப்போட்டி, தினமும் இரண்டு சுற்றுகள் வீதம், மொத்தம் ஒன்பது சுற்றுகள் அடிப்படையில், 'பிடே ரேட்டிங்' அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன. ஓபன் முறையில் இரு பாலருக்கும், 25 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கும், தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.
நேற்று நடந்த இரண்டாம் நாள் போட்டியை, தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் கிரிஜா சந்திரன், செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கத்தின் செயலர் கிருஷ்ணமூர்த்தி துவங்கினர்.
நேற்றைய மூன்று சுற்றுகள் முடிவில், ஆண்களில் செங்கல்பட்டு வீரர் ரத்னசபாபதி, சென்னையைச் சேர்ந்த இனியன்; பெண்களில் சென்னையைச் சேர்ந்த ஷன்மதி ஸ்ரீ மற்றும் சேலத்தைச் சேர்ந்த மகிழினி ஆகியோர் தலா 3 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.