Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போதை மாத்திரை விற்ற வாலிபர் சிக்கினார்

போதை மாத்திரை விற்ற வாலிபர் சிக்கினார்

போதை மாத்திரை விற்ற வாலிபர் சிக்கினார்

போதை மாத்திரை விற்ற வாலிபர் சிக்கினார்

ADDED : ஜூன் 20, 2025 12:25 AM


Google News
மடிப்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதியில், மொபைல் போன் வாயிலாக வாடிக்கையாளர்களை பிடித்து, ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக, மடிப்பாக்கம் உதவி கமிஷனர் முத்துராஜுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, மடிப்பாக்கம் போலீசார், நேற்று அதிகாலை பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் எல்லைப் பகுதியில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் பைக்கில் வந்த நபரை மடக்கி சோதனையிட்டனர்.

அவரிடம், டைடால் எனும் வலி நிவாரணி மாத்திரை இருப்பது கண்டறியப்பட்டது. அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர் கண்ணகி நகர் அடுத்த எழில் நகரை சேர்ந்த சரவணன், 25, என்பது தெரியவந்தது.

பெங்களூருவில் இருந்து டைடால் மாத்திரைகளை வாங்கி வந்து, பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், மொபைல் போன் வாயிலாக வாடிக்கையாளர்களை பிடித்து, போதை மாத்திரையாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

அவரிடம் இருந்த, 160 டைடால் மாத்திரைகள், நான்கு மொபைல் போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின், அவர் மீது வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us