/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விஷவாயு தாக்கி இருவர் இறந்த வழக்கு கைதான இருவரை விடுவித்தது கோர்ட் விஷவாயு தாக்கி இருவர் இறந்த வழக்கு கைதான இருவரை விடுவித்தது கோர்ட்
விஷவாயு தாக்கி இருவர் இறந்த வழக்கு கைதான இருவரை விடுவித்தது கோர்ட்
விஷவாயு தாக்கி இருவர் இறந்த வழக்கு கைதான இருவரை விடுவித்தது கோர்ட்
விஷவாயு தாக்கி இருவர் இறந்த வழக்கு கைதான இருவரை விடுவித்தது கோர்ட்
ADDED : செப் 17, 2025 01:06 AM
சென்னை,கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது, விஷவாயு தாக்கி இருவர் இறந்த வழக்கில் கைதா இருவரை விடுதலை செய்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள ராணுவ அலுவலர்கள் குடியிருப்பில், 2021ம் ஆண்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடந்தது.
இந்த பணியில், அன்னை சத்யாநகரைச் சேர்ந்த சந்தோஷ், ராஜா ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, விஷவாயு தாக்கியதில், இருவரும் மூச்சு திணறி இறந்தனர். மற்ற மூன்று பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதுகுறித்து, கோட்டை போலீசார் விசாரித்து, ஆந்திராவை சேர்ந்த கே.டி.ராஜிவ், விருதுநகரை சேர்ந்த கோபிகண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன் நடந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் சுதிர்காபாசு, தியாகையா ஆஜராகி, ''ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் தலைமை செயலக வளாகத்தில், இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனத்துடன் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் இந்த வழக்கில் பலிகடா ஆக்கப்பட்டு உள்ளனர்,'' என்றனர்.
இதை ஏற்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குற்றம்சாட்டப்பட்ட இருவரும் ஒப்பந்த நிறுவனத்தின் திட்ட மேலாளர், மேற்பார்வையாளராக பணியாற்றி வந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்யவில்லை.
ஒப்பந்த நிறுவன உத்தரவு அடிப்படையில், அவர்கள் பணியை மேற்கொண்டார்கள் என்பதற்கும், பணியாளர்களை வெறும் கையால் கழிவுநீர் தொட்டியை சுத்தப்பப்படுத்த செய்ய வைத்தனர் என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.
எனவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜிவ், கோபிகண்ணன் ஆகியோர் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***