/உள்ளூர் செய்திகள்/சென்னை/மீண்டும் எழும்பூரில் இருந்து மங்களூர் ரயில்மீண்டும் எழும்பூரில் இருந்து மங்களூர் ரயில்
மீண்டும் எழும்பூரில் இருந்து மங்களூர் ரயில்
மீண்டும் எழும்பூரில் இருந்து மங்களூர் ரயில்
மீண்டும் எழும்பூரில் இருந்து மங்களூர் ரயில்
ADDED : செப் 17, 2025 01:05 AM
சென்னை,மங்களூர் விரைவு ரயில், வரும் 19 முதல் மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
எழும்பூரில் நடந்து வரும் மேம்பாட்டு பணி காரணமாக, விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. அந்த வகையில், எழும்பூர் - மங்களூர் விரைவு ரயில், தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது, பணிகள் ஓரளவுக்கு முடிந்துள்ள நிலையில், மங்களூர் விரைவு ரயில் வரும் 19ம் தேதி முதல் மீண்டும் எழும்பூரில் இருந்து வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.