/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆம்புலன்ஸ் வாகன வசதிக்காக சாலை தடுப்பு உடைக்க முடிவு ஆம்புலன்ஸ் வாகன வசதிக்காக சாலை தடுப்பு உடைக்க முடிவு
ஆம்புலன்ஸ் வாகன வசதிக்காக சாலை தடுப்பு உடைக்க முடிவு
ஆம்புலன்ஸ் வாகன வசதிக்காக சாலை தடுப்பு உடைக்க முடிவு
ஆம்புலன்ஸ் வாகன வசதிக்காக சாலை தடுப்பு உடைக்க முடிவு
ADDED : ஜூன் 20, 2025 12:25 AM

சென்னை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில், ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இதற்கு, திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகேயும், சுற்றுலா துறை அலுவலகம் அருகேயும், இரு நுழைவாயில்கள் உள்ளன.
இதில், திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே உள்ள நுழைவாயில் வழியாக மட்டுமே, ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வருகின்றன.
அண்ணா சாலை வழியாக வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், எந்தவித சிரமமும் இன்றி மருத்துவமனைக்கு செல்கின்றனர். ஆனால், வாலாஜா சாலை வழியாக வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், அண்ணாசாலை சென்று 'யு - டர்ன்' செய்து தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது.
எனவே, சாலை தடுப்பை உடைத்து அகற்றி, வாலாஜா சாலை வழியாக வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, கிழக்கு மண்டல துணை கமிஷனர் மெகலினா ஐடன் மற்றும் ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அதிகாரி, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்துவது குறித்து பேச்சு நடத்தினர். இன்னும் ஓரிரு நாட்களில் சாலை தடுப்புகள் உடைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல வழிவகை செய்யப்பட உள்ளது.