/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குழாயை மாற்றாததால் வடிகால்வாய் பணி மந்தம் குழாயை மாற்றாததால் வடிகால்வாய் பணி மந்தம்
குழாயை மாற்றாததால் வடிகால்வாய் பணி மந்தம்
குழாயை மாற்றாததால் வடிகால்வாய் பணி மந்தம்
குழாயை மாற்றாததால் வடிகால்வாய் பணி மந்தம்
ADDED : ஜூன் 16, 2025 03:00 AM

வடபழனி,:அசோக் நகர் முதல் கோயம்பேடு வரை உள்ள 100 அடி சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ளது. இச்சாலையின் இருபுறமும், மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இதில் பல இடங்களில் இணைப்பு ஏற்படுத்தாமல் இருந்தனர்.
விடுபட்ட 1.7 கி.மீ., துாரத்திற்கு, 11 கோடி ரூபாயில் வடிகால்வாய் அமைக்கும் பணி, 2023ல் துவங்கப்பட்டது. வடபழனி 100 அடி சாலை அழகிரி தெரு முதல் அரும்பாக்கம் வரை, வடிகால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடந்து வந்தன.
இதில், 250 மீட்டர் துார பணி மீதமுள்ள நிலையில், அவ்வழியாக குடிநீர் குழாய் செல்வதால், வடிகால்வாய்க்கு பள்ளம் தோண்ட முடியாமல், கடந்த ஜன., மாதம் பணிகள் நிறுத்தப்பட்டன.
குடிநீர் வாரியம் சார்பில், குழாயை மாற்றி அமைத்த பின், வடிகால்வாய் பணியை தொடர, நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், இதுவரை குழாயை மாற்றி அமைக்காததால் விடுபட்ட பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் சாலை குறுகி இருப்பதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.