Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அவசர கால தங்குமிடம் தயாரிப்பு தொழில்நுட்பம்

அவசர கால தங்குமிடம் தயாரிப்பு தொழில்நுட்பம்

அவசர கால தங்குமிடம் தயாரிப்பு தொழில்நுட்பம்

அவசர கால தங்குமிடம் தயாரிப்பு தொழில்நுட்பம்

ADDED : அக் 19, 2025 03:39 AM


Google News
சென்னை: அவசர காலத்திற்கு குறைந்த எடையில் விரைவாக அறையை உருவாக்கும் தொழில்நுட்பத்தை, சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், டில்லியை சேர்ந்த, 'சேகல் டோர்ஸ்' என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கி யுள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் உள்ளது. இதன் கீழ் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது.

நம் நாட்டில், 2020ல் கொரோனா தொற்றால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.

மருத்துவமனைகளில் படுக்கை அறை கிடைக்கவில்லை. இதனால், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவசர காலங்களில், விரைவாக தற்காலிக அறைகளை உருவாக்க, 'போர்ட்டபிள் லைட்வெயிட் போர்டபிள் மாட்யூல்' என்ற தொழில்நுட்பதை, எஸ்.இ.ஆர்.சி., உருவாக்கியது. இதன் வாயிலாக, இரும்பு ஸ்டீல், 'பப் பேனல் ஷீட்' பயன்படுத்தி, தங்குமிட அறை உருவாக்கப்படுகிறது.

பின், அதை தனித்தனியாக பிரித்து மடித்து, எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். இதை அவசரகால இடம், கட்டுமான இடங்களில் தங்குமிடமாக பயன்படுத்தலாம்.

இந்த குறைந்த எடை உடைய கட்டுமான தொழில்நுட்பத்தை, சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம், 'சேகல் டோர்ஸ்' என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இதுகுறித்து, சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., இயக்குனர் ஆனந்தவள்ளி கூறியதாவது:

பேரிடர் காலங்கள், கட்டுமான பணி நடக்கும் இடங்கள், அதிக மக்கள் கூடும் இடங்களில் தங்குமிட அறைகள் தேவைப்படுகின்றன. இதற்காக, குறைந்த எடையில் தங்குமிடம் ஏற்படுத்தும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இரும்பு, 'பப் பேனல் ஷீட்' பயன்படுத்தி, ஒவ்வொரு பேனலாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பேனல்களை ஒன்றிணைத்து தங்குமிடம் ஏற்படுத்தலாம். அதற்கு உள்ளேயே மின் விசிறி, மின் விளக்குகளுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாகனத்தில் எடுத்து சென்று எங்கு வேண்டுமானாலும், அறையை உருவாக்க முடியும். இதற்கு, அடித்தளம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us