Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விண்வெளி கழிவு அகற்ற விண்கலம்

விண்வெளி கழிவு அகற்ற விண்கலம்

விண்வெளி கழிவு அகற்ற விண்கலம்

விண்வெளி கழிவு அகற்ற விண்கலம்

ADDED : அக் 19, 2025 03:42 AM


Google News
: விண்வெளி ஆராய்ச்சியில் தீர்க்கப்படாத சவாலாக விண்வெளி குப்பைகள் உள்ளன. ஏவப்படும் செயற்கைக்கோள் எண்ணிக்கை கூடி வருவதால் இந்தப் பிரச்னை கடுமையானதாகவும், ஆபத்துகள் நிறைந்ததாகவும் மாறியுள்ளது.

இந்தியா விண்வெளி தொழில்நுட்பத் திறன்களை அதிகரித்து வருவதால், விண்வெளி நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அதன் சுற்றுப்பாதை குப்பைகளை நிர்வகிப்பது முக்கியமானதாக மாறியுள்ளது. 'காஸ்மோசர்வ்' என்ற 'ஸ்டார்ட் அப்'பை, முன்னாள் 'இஸ்ரோ' விஞ்ஞானி சிரஞ்சீவி பனீந்திரா நிறுவினார்; பூமியின் சுற்றுப்பாதையை சுத்தம் செய்வதற்கு நிலையான மற்றும் செலவு குறைந்த தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

விண்கலம் உருவாகிறது

ஆலன் ரூட்லெட்ஜ் தலைமையிலான 'முன் விதை நிதி' (ப்ரீ சீடு பண்டிங்) சுற்றில் இந்த நிறுவனம், 30 கோடி ரூபாயை பெற்றது. விண்வெளியைப் பாதுகாப்பானதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதற்காக, குப்பைகளை அகற்றுவதற்கான தன்னாட்சி ரோபோ விண்கலத்தை உருவாக்க இந்த பணம் பயன்படுத்தப்படும்.

செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி பயணங்களுக்கான நீண்ட கால செயல்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஆபத்தான பொருட்களை அடையாளம் காணவும், கண்காணிக்கவும், அழிக்கவும் இந்த 'ஸ்டார்ட் அப்', ஒரு ரெட்ரீவர் விண்கலத்தை வடிவமைத்து வருகிறது.

ஒழுங்குமுறை ஒப்புதல்கள் மற்றும் சோதனைகள் முடிந்ததும், அரசு விண்வெளி நிறுவனங்கள், தனியார் செயற்கைக்கோள் ஆப்பரேட்டர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள வணிக விண்வெளி நிறுவனங்களுக்கு சேவை செய்வதை காஸ்மோசர்வ் நோக்கமாகக் கொண்டுள்ளது.

13 ஆயிரம் செயற்கைக்கோள்கள் 2017ல், ஒரே ஆண்டில் ஏவப்பட்ட மொத்த செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 300க்கும் அதிகம்; 2020ல் முதல் முறையாக ஒரே ஆண்டில் 1000 செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களின் வரம்பைத் தாண்டியது. தற்போது 13,000 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன.

இது தவிர 3000க்கும் அதிகமாக செயலற்ற செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன.

இந்த ஸ்டார்ட் அப் 2033க்குள் தனது வர்த்தகத்தை, 18,000 கோடி ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இ-மெயில்: contact@cosmoserve.space

சந்தேகங்களுக்கு இ-மெயில்: Sethuraman.sathappan@gmail.com அலைபேசி: 98204 51259

இணையதளம்: www.startupandbusinessnews.com

- சேதுராமன் சாத்தப்பன் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us