/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பொது// பெட்ரோல் குண்டு வீச்சு கொடுங்கையூர் வாலிபர் கைது பொது// பெட்ரோல் குண்டு வீச்சு கொடுங்கையூர் வாலிபர் கைது
பொது// பெட்ரோல் குண்டு வீச்சு கொடுங்கையூர் வாலிபர் கைது
பொது// பெட்ரோல் குண்டு வீச்சு கொடுங்கையூர் வாலிபர் கைது
பொது// பெட்ரோல் குண்டு வீச்சு கொடுங்கையூர் வாலிபர் கைது
ADDED : செப் 17, 2025 12:45 AM
கொடுங்கையூர், கொடுங்கையூரில், குடும்ப பிரச்னை காரணமாக, சர்ச் வாசலில் பெட்ரோல் குண்டு வீசியவரை, போலீசார் கைது செய்தனர்.
கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, சிவசங்கரன் தெருவை சேர்ந்தவர் எலன் ரோஸ், 37. இவர், மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது கணவர் பால்ஞானம், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, சிவசங்கரன் தெருவில் உள்ள வீட்டின் கீழ் தளத்தில், புனித சீயோன் கிருஸ்துவ சபை நடத்தி வருகிறார். அதே பகுதியில், எலன்ரோஸ்க்கும், அவரது அக்கா எஸ்தருக்கும் சொந்தமான, 900 சதுரடியில் வீடு உள்ளது.
அந்த வீட்டின் மொட்டை மாடியில், தினமும் எலன்ரோசின் அக்கா மகன் டக்ளஸ் பிரின்ஸ், 24, அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்துள்ளார். இது தொடர்பாக, எலன்ரோசுக்கும், டக்ளஸ் பிரின்சுக்கும் பிரச்னை இருந்துள்ளது. செம்பியம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று, எலன் ரோசிடம் தகராறு செய்த டக்ளஸ் பிரின்ஸ், சர்ச் வாசலில் பெட்ரோல் குண்டை வீசி சென்றார். இதில், சர்ச் வாசலில் இருந்த பொருட்கள் எரிந்தன. இதுகுறித்த புகாரின்படி, டக்லஸ் பிரின்ஸை கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர்.