ADDED : செப் 17, 2025 12:45 AM
கட்டடத் தொழிலாளி
மயங்கி விழுந்து பலி
புளியந்தோப்பு:வியாசர்பாடி, பி - கல்யாணபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 63; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பெரம்பூர் பழனி முருகன் கோவில் தெருவில் உள்ள பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து, செம்பியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
----------------
கஞ்சா வியாபாரி கைது
ஓட்டேரி ஸ்ரீபன்சன் சாலையில், கஞ்சா விற்று வந்த, புளியந்தோப்பு நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிகரன், 23 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.