/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
ADDED : டிச 05, 2025 07:08 AM

மேடவாக்கம்: பள்ளி மாணவ - மாணவர்களிடையே, தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் உள்ள ஆர்வத்தையும், திறமையையும் கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அதற்கான தேர்வு, கடந்த அக்., 11ல் நடந்தது; 70,508 மாணவ - மாணவியர், இந்த தேர்வை எழுதினர்.
இதன் முடிவு கடந்த 1ல் வெளியிடப்பட்டது. இதில், மேடவாக்கம் அரசுப் பள்ளி மாணவர்களான யோகரம்யா - 98, யாக்னா - 96, வின்சென்ட் செல்வா - 90 மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பட்டியலில், செங்கல்பட்டு மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
இம்மாணவ - மாணவியருக்கு இரு ஆண்டுகளுக்கு, மாதம்தோறும் தலா 1,500 வீதம் 36,000 ரூபாய் ஊக்கத் தொகையாக தமிழக அரசால் வழங்கப்படும் என, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


