Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'வெடி மருந்து கண்களில் பட்டால் தேய்க்காதீர்'

'வெடி மருந்து கண்களில் பட்டால் தேய்க்காதீர்'

'வெடி மருந்து கண்களில் பட்டால் தேய்க்காதீர்'

'வெடி மருந்து கண்களில் பட்டால் தேய்க்காதீர்'

ADDED : அக் 17, 2025 11:18 PM


Google News
சென்னை: ''பட்டாசு வெடிக்கும், வெடி மருந்து கண்களில் பட்டால் தேய்க்காதீர்; பார்வை இழப்பு ஏற்படுத்தக்கூடும்,'' என, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை பிராந்திய தலைவர் எஸ்.சவுந்தரி கூறினார்.

இது குறித்து, டாக்டர் சவுந்தரி கூறியதாவது:

தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகள் வெடிப்பதால், கண்களில் அதிகளவில் காயங்கள் ஏற்படுகின்றன.

பட்டாசு வெடிக்கும்போது வெளிவரும் புகை, தொண்டை அழற்சியோடு, பிற தொற்று பாதிப்பையும் ஏற்படுத்தும். தங்கத்தை உருக்கும் உயர் வெப்ப நிலையில் மத்தாப்புகள் எரிவதால், 'கான்டாக்ட் லென்ஸ்கள்' அணிந்து, பட்டாசு வெடிக்க கூடாது.

கண்களில் கருவிழி காயம், கீறல், ஊடுருவல் காயம், துளையுடன் கூடிய காயங்கள் பட்டாசுகளால் ஏற்படுகிறது.

எனவே, கண்களில் வெடிமருந்து பட்டாலும், காயம் ஏற்பட்டாலும், கண்களை தேய்க்கக் கூடாது. மாறாக கண்களையும், முகத்தையும் முறையாக கழுவுங்கள்.

பின், உரிய கண் டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். பட்டாசு வேதிப்பொருட்கள் கண்களில் பட்டால், 30 நிமிடங்களுக்குள் டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். டாக்டர் பரிந்துரையின்றி, வலி நிவாரணி மருந்துகள், ஆயின்மென்டை பயன்படுத்த கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us