/உள்ளூர் செய்திகள்/சென்னை/நீண்ட காலமாக தீராத கழிவுநீர் பிரச்னை: மக்கள் கடும் அவதிநீண்ட காலமாக தீராத கழிவுநீர் பிரச்னை: மக்கள் கடும் அவதி
நீண்ட காலமாக தீராத கழிவுநீர் பிரச்னை: மக்கள் கடும் அவதி
நீண்ட காலமாக தீராத கழிவுநீர் பிரச்னை: மக்கள் கடும் அவதி
நீண்ட காலமாக தீராத கழிவுநீர் பிரச்னை: மக்கள் கடும் அவதி
ADDED : ஜூலை 25, 2024 02:15 PM

சென்னை: வட சென்னை ராயபுரம், 48வது வார்டு ஆறுமுகம் தெருவில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, பல வருடங்களாக சரி செய்யாமல் உள்ளது. ரோட்டில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது என குடியிருப்போர் நல சங்கத் தலைவர் மாரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ‛‛அனைவருக்கும் நோய்த்தொற்று ஏற்படுகிறது. இது குறித்து பல வருடங்களாக நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவு நீர் வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்''. இவ்வாறு அவர் கூறினார்.