Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 1.50 லட்சம் பனை விதை நடும் திட்டத்தை துவக்கினார் மேயர்

1.50 லட்சம் பனை விதை நடும் திட்டத்தை துவக்கினார் மேயர்

1.50 லட்சம் பனை விதை நடும் திட்டத்தை துவக்கினார் மேயர்

1.50 லட்சம் பனை விதை நடும் திட்டத்தை துவக்கினார் மேயர்

ADDED : அக் 10, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
பாலவாக்கம் : சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.50 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் திட்டத்தை, மேயர் பிரியா நேற்று, பாலவாக்கம் கடற்கரையில் துவக்கி வைத்தார்.

புயலில் இருந்து சென்னையை பாதுகாக்கவும், கடலரிப்பை தடுக்கவும், கடற்கரைகளில் பனை மரங்கள் வளர்க்கும் திட்டத்தை, மாநகராட்சி மேயர் பிரியா, பெருங்குடி மண்டலம், பாலவாக்கம் கடற்கரையில் நேற்று துவக்கி வைத்தார்.

பின், நிருபர்களிடம் அவர் பேசியதாவது:

சென்னை மாநகராட்சியில் மட்டும் 10 லட்சம் மரக்கன்றுகள் வைக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி 1.50 லட்சம் பனை விதைகளை நடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

பருவமழைக்காலம் துவங்கவுள்ள நிலையில், தற்போது நடப்பட்டுள்ள விதைகள், இயற்கையாகவே வளரும் சூழல் ஏற்படும். அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம், பனை விதைகள் நடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல், மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் பனை விதை நடவு செய்யும் பணி நடந்தது.

கட்டுப்பாட்டு மையம் சென்னை மாநகராட்சியில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, ஷெனாய் நகரில் உள்ள வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை மேயர் பிரியா நேற்று துவக்கி வைத்தார்.

வட்டாரம் வாரியாக கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us