/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அரசு பள்ளிகளில் ரூ.60 லட்சத்தில் நவீன ஆய்வகம் அரசு பள்ளிகளில் ரூ.60 லட்சத்தில் நவீன ஆய்வகம்
அரசு பள்ளிகளில் ரூ.60 லட்சத்தில் நவீன ஆய்வகம்
அரசு பள்ளிகளில் ரூ.60 லட்சத்தில் நவீன ஆய்வகம்
அரசு பள்ளிகளில் ரூ.60 லட்சத்தில் நவீன ஆய்வகம்
ADDED : செப் 30, 2025 02:10 AM
பல்லாவரம்:செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் நாகல்கேணியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி மற்றும் கவுல்பஜார் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில், 60 லட்சம் ரூபாய் செலவில், மாணவ - மாணவியர் அடிப்படை தொழில்நுட்ப கல்வி பயிலும் வகையில், 'அடல் டிங்கரிங்' ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது.
'நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்த ஆய்வகம், கடந்த வாரம் பயன்பாட்டிற்கு வந்தது.
இந்த ஆய்வகத்தில், மாணவர்கள் தங்களின் புதுமையான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து, கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஏதுவாக, அறிவியல் ரோபோடிக்ஸ், மைக்ரோ கன்ட்ரோல் போர்டு சென்சார்ஸ், 3டி பிரின்டர்ஸ் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.


