/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நடைபாதை ஆக்கிரமிப்பு வேளச்சேரியில் அகற்றம் நடைபாதை ஆக்கிரமிப்பு வேளச்சேரியில் அகற்றம்
நடைபாதை ஆக்கிரமிப்பு வேளச்சேரியில் அகற்றம்
நடைபாதை ஆக்கிரமிப்பு வேளச்சேரியில் அகற்றம்
நடைபாதை ஆக்கிரமிப்பு வேளச்சேரியில் அகற்றம்
ADDED : செப் 24, 2025 03:47 AM

வேளச்சேரி,
நடைபயிற்சி செய்வோருக்கு இடையூறாக இருந்த நடைபாதை ஆக்கிரமிப்புகளை, நேற்று மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
அடையாறு மண்டலம், 176வது வார்டு, வேளச்சேரி- - பரங்கிமலை ரயில்வே சாலையில், 6 அடி அகல நடைபாதை உள்ளது. இந்த சாலையில், தினமும் நடைபயிற்சி செய்வோர் அதிகம்.
நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டிருப்பதால், நடைபயிற்சியாளர்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன.
இதையடுத்து, நேற்று மாநகராட்சி அதிகாரிகள், நடைபாதையில் இருந்த, 13 கடைகளை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமித்தால், கைது செய்யும் வகையில் போலீசில் புகார் அளிக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.