/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாலை வெட்டுகளை சீரமைக்க ரூ.15 கோடி வழங்கிய வாரியம் சாலை வெட்டுகளை சீரமைக்க ரூ.15 கோடி வழங்கிய வாரியம்
சாலை வெட்டுகளை சீரமைக்க ரூ.15 கோடி வழங்கிய வாரியம்
சாலை வெட்டுகளை சீரமைக்க ரூ.15 கோடி வழங்கிய வாரியம்
சாலை வெட்டுகளை சீரமைக்க ரூ.15 கோடி வழங்கிய வாரியம்
ADDED : செப் 24, 2025 03:47 AM
சோழிங்கநல்லுார்
சோழிங்கநல்லுாரில் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை வெட்டு பகுதிகளை சீரமைக்க, 15.56 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 192, 193, 194, 195, 200 ஆகிய வார்டுகளில், குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக, சாலை வெட்டு பணி நடந்தது.
இதில் இரண்டாம் கட்டமாக, பணி முடிந்த 92 தெருக்களில், பள்ளத்தை சீரமைக்க, 15.56 கோடி ரூபாய் மாநகராட்சியால் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
இந்த நிதியை, சென்னை குடிநீர் வாரியம், மாநகராட்சிக்கு செலுத்தியது. மழையை பொறுத்து, பள்ளம் சீரமைக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.