/உள்ளூர் செய்திகள்/சென்னை/குடிநீருக்கு தவிக்கும் பெரம்பூர் வாசிகள்குடிநீருக்கு தவிக்கும் பெரம்பூர் வாசிகள்
குடிநீருக்கு தவிக்கும் பெரம்பூர் வாசிகள்
குடிநீருக்கு தவிக்கும் பெரம்பூர் வாசிகள்
குடிநீருக்கு தவிக்கும் பெரம்பூர் வாசிகள்
ADDED : பிப் 06, 2024 12:34 AM

பெரம்பூர், பெரம்பூர் 71 மற்றும் 73வது வார்டு சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே குடிநீரில் கழிவுநீர் கலப்பு உள்ளது.
இதுகுறித்த புகாரை அடுத்து, குடிநீர் குழாய் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், வீரராகவன் சாலையைத் தொடர்ந்து கோவிந்தன் சாலை வழியாக, குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் குடிநீர் 'சப்ளை' நிறுத்தப்பட்டுள்ளதாக பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மொத்தமுள்ள 16 தெருக்களிலும் குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்யாததால், பகுதி மக்கள் குடங்களை சைக்கிள் மற்றும் மீன்பாடி வண்டிகளில் கட்டிக் கொண்டு, குடிநீருக்காக அலைந்து வருகின்றனர்.
இதுகுறித்து, பகுதி மக்கள் கூறியதாவது:
குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பாக புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரச்னையை சரி செய்யாமல் காலம் தாழ்த்துகின்றனர். எந்தவித மாற்று ஏற்பாடும் செய்யாமல், குடிநீர் குழாய் பதிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனால், பகுதி மக்கள் குடிநீருக்கு தெருத் தெருவாக அலைய வேண்டியுள்ளது. தண்ணீர் தொட்டி இருந்தும், லாரி மூலமும் 'சப்ளை' செய்யவில்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.


