Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருமங்கலத்தில் குடியிருப்புகள் உரிய பாதுகாப்பின்றி இடிப்பு மெட்ரோ நிர்வாகத்தின் அலட்சிய பணியால் மக்கள் அவதி

 திருமங்கலத்தில் குடியிருப்புகள் உரிய பாதுகாப்பின்றி இடிப்பு மெட்ரோ நிர்வாகத்தின் அலட்சிய பணியால் மக்கள் அவதி

 திருமங்கலத்தில் குடியிருப்புகள் உரிய பாதுகாப்பின்றி இடிப்பு மெட்ரோ நிர்வாகத்தின் அலட்சிய பணியால் மக்கள் அவதி

 திருமங்கலத்தில் குடியிருப்புகள் உரிய பாதுகாப்பின்றி இடிப்பு மெட்ரோ நிர்வாகத்தின் அலட்சிய பணியால் மக்கள் அவதி

ADDED : டிச 01, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
திருமங்கலம்: போதிய பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை இல்லாமல், மெட்ரோ ரயில் பாதை பணிக்காக இடிக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களால், மற்ற குடியிருப்பு மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

திருமங்கலம், 100 அடி சா லையில் மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடக்கின்றன. இதற்காக, திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் பாதையில், குறிப்பிட்ட சில அடுக்குமாடி குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட்டன .

இதில், 'அஜந்தா' பெயர் உடைய நான்கு தளமுடைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணிகளை, மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இங்கு, உரிய பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை இல்லாமல் பணிகள் நடப்பதாக அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதேபகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஷாலிகா, 33, என்பவர் கூறியதாவது:

மெட்ரோ ரயில் திட்டப்பணிக்காக, திருமங்கலத்தில் சில நாட்களாக, நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கும் பணிகள் நடக்கின்றன.

வெளிப்புறத்தில் முறையாக தடுப்புடன் கூடிய சாரம் அமைக்காமல், அலட்சியமாக பணிகள் நடக்கின்றன. முதல்தளம் வரை கூட சாரம் கட்டவில்லை.

இதனால், கட்டடத்தை இடிப்பதில் இருந்து வெளிவரும் புழுதியால் இன்னல்களை சந்திக்கிறோம். 100 அடி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, கட்டடம் முழுதும் தடுப்பு வேலி அமைத்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us