/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ரோபோடிக்' உதவியுடன் நுரையீரல் சிகிச்சை பெண்ணிற்கு மறுவாழ்வு 'ரோபோடிக்' உதவியுடன் நுரையீரல் சிகிச்சை பெண்ணிற்கு மறுவாழ்வு
'ரோபோடிக்' உதவியுடன் நுரையீரல் சிகிச்சை பெண்ணிற்கு மறுவாழ்வு
'ரோபோடிக்' உதவியுடன் நுரையீரல் சிகிச்சை பெண்ணிற்கு மறுவாழ்வு
'ரோபோடிக்' உதவியுடன் நுரையீரல் சிகிச்சை பெண்ணிற்கு மறுவாழ்வு
ADDED : செப் 25, 2025 12:29 AM
சென்னை: ரோபோடிக் உதவியுடன், 26 வயது பெண்ணுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை அளித்து, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனையின், ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் சுஜய் சுசிகர் கூறியதாவது:
நுரையீரல்களில் திரும்ப திரும்ப ஏற்படும் தொற்றுகளால், 26 வயதான பெண் சிரமப்பட்டார்.
உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், சுவாச பிரச்னை, நாள்பட்ட இருமல், ரத்த வாந்தி எடுத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இதற்கு அறுவை சிகிச்சை அவசியம். ஆனால், வழக்கமான அறுவை சிகிச்சையில், நோயாளி குணமடைய பல மாதங்கள் வரை ஆகலாம்.
எனவே, மருத்துவ மனையில் நவீன ரோபோடிக் உதவியுடன், 3 செ.மீ., அளவுள்ள சிறிய துளை வாயிலாக நுரையீரலில் பாதிக்கப்பட்ட பகுதி அறுவை சிகிச்சையில் நீக்கப்பட்டது.
இந்த முறையில் ரத்த இழப்பு மிக குறைவாக இருந்தது. மேலும், நல்ல திசுக்கள் சேதமடையாமல் பாதிக்கப்பட்டன. இவற்றால் அப்பெண் விரைந்து வீடு திரும்பினார்.
இவ்வாறு அவர் கூறினார்.