ADDED : செப் 25, 2025 12:30 AM
நவராத்திரி விழா முருகன் கோவில் சக்தி கொலுவை முன்னிட்டு, உத்சவர் அம்பாளுக்கு அபிராமி அம்மன் அலங்காரம், மாலை 6:00 மணி. நாட்டிய கலா மந்திர் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் மாணவர்களின் பரத நாட்டியம், மாலை 6:00 மணி, பின்னணி பாடகர் வேல்முருகன் பக்தி பாடல்கள், இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.
சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமம் சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரமத்தில் சாரதா சரண் நவராத்திரி மகோத்சவத்தை முன்னிட்டு கருடவாகன அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: தி.நகர்.
கற்பக விநாயகர் கோவில் சாரதாம்பாளுக்கு அர்த்தநாரி, துர்க்கைக்கு மீனாட்சி அலங்காரம், மாலை 5:00 மணி. இடம்: 9வது தெரு, சாந்தி நகர், ஆதம்பாக்கம்.
கபாலீஸ்வரர் கோவில் கற்பகாம்பாள், நாக வாகனத்தில் பத்மாசினி அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மகாலட்சுமி அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: அரசன் கழனி, ஒட்டியம்பாக்கம்.
வடிவுடையம்மன் கோவில் நவராத்திரி திருவிழா மூன்றாம் நாள். உத்சவ தாயார் நந்தினி அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதி உற்சவம் இரவு 7:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.
காளிகாம்பாள் கோவில் மகாலட்சுமி அலங்காரம், இரவு 7:00 மணி. இடம்: தம்பு செட்டி தெரு, பிராட்வே.
மஹா பெரியவா சரணாலயம் உபன்யாசம், மயிலாடுதுறை ராகவன், மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்
லட்சுமி, சக்தி, சரஸ்வதி கோவில் பிரத்தியங்கிரா தேவி அலங்காரம், அம்மன் திருவடி அலங்காரம், காலை முதல். இடம்: எண்: 21, 36வது தெரு, ஜ.கே.எம்., காலனி, பட்மேடு, வில்லிவாக்கம்
தேனுபுரீஸ்வரர் கோவில் விசாலாட்சி அலங்காரம், இரவு 7:00 மணி. இடம்: சேலையூர், மாடம்பாக்கம்.
சர்வ சித்தி விநாயகர் கோவில் துர்க்கை அபிஷேகம், காலை 8:00 மணி, அன்னபூரணி அலங்காரம், செல்வி ரிஷிகா கோபால் பாபு மாணவர்களின் பக்திப் பாடல்கள், மாலை 6:00 மணி. இடம்: பார்சன் நகர், வி.ஜி.பி., சாலை, சைதாப்பேட்டை.
வரசித்தி விநாயகர் கோவில் மஞ்சுளா கணேஷின் கலை நிகழ்ச்சி, மாலை 6:30 மணி. இடம்: ஐ.ஓ.பி., காலனி, கேம்ப் ரோடு, சேலையூர்.
அஷ்டசித்தி விநாயகர் கோவில் அபிஷேகம், அலங்காரம், மாலை 6:00 மணி, வித்யா மந்திர் நாட்டிய கலா கேந்திரா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, மாலை 6:30 மணி. இடம்: வித்யா லட்சுமி தெரு, ராஜேஸ்வரி நகர், சேலையூர்
ஜெய் பிர த்யங்கிரா பீடம் ஹோமம், சுமங்கலி பூஜை, புஷ்பாஞ்சலி, காலை 7:30 மணி முதல். இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெண்பாக்கம் மலையடிவாரம், வெங்கடாபுரம்.
வராஹி அறச்சபை பசுஞ்சாண விபூதி அபிஷேகம், கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை.
பார்த்தசாரதி பெருமாள் கோவில் லட்சார்ச்சனை, மாலை 4:00 மணி, வேதவல்லித்தாயார் சேஷ வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
அகோபில மடம் தேசிகன், ஆதிவண் சடகோப சுவாமிகளின் திருநட்சத்திர உத்சவம் முன்னிட்டு, பல்லக்கு புறப்பாடு, காலை 8:00 மணி. யாளி வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பொது பொம்மை கொலு கண்காட்சி நவராத்திரியை முன்னிட்டு பூம்புகார் நிறுவனம் சார்பில், கொலு பொம்மை கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை.