/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தென் மாநில தடகள போட்டி தமிழகத்திற்கு 36 பதக்கங்கள் தென் மாநில தடகள போட்டி தமிழகத்திற்கு 36 பதக்கங்கள்
தென் மாநில தடகள போட்டி தமிழகத்திற்கு 36 பதக்கங்கள்
தென் மாநில தடகள போட்டி தமிழகத்திற்கு 36 பதக்கங்கள்
தென் மாநில தடகள போட்டி தமிழகத்திற்கு 36 பதக்கங்கள்
ADDED : செப் 24, 2025 12:54 AM
சென்னை : ஆந்திர மாநிலத்தில் நடந்து வரும் தென் மாநில தடகள போட்டிகளில் முதல் நாளான நேற்று, தமிழக அணி 14 தங்கம், 14 வெள்ளி, எட்டு வெண்கலம் என, 36 பதக்கங்களுடன் புதிய சாதனை படைத்தது.
ஆந்திர மாநில தடகள சங்கம் சார்பில், தென் மாநில தடகள போட்டிகள், ஆந்திராவின் குண்டூரில் நேற்று துவங்கின. இதில், தமிழகம், கேரளா, புதுச்சேரி உட்பட ஆறு மாநிலங்களை சேர்ந்த 1,500க்கும் அதிகமான வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் 144 வீரர் - வீராங்கனையர் போட்டியிடுகின்றனர். போட்டி 14, 16, 20 வயதுக்கு உட்பட்டோர் என மூன்று பிரிவாக நடக்கிறது.
முதல் நாள் முடிவில், தமிழக அணி 14 தங்கம், 14 வெள்ளி, எட்டு வெண்கலம் என மொத்தம், 36 பதக்கங்களை வென்று சாதித்துள்ளது. இந்த போட்டியில், சென்னையின் சுபதர்ஷினி, சுதர்ஷினி ஆகியோர், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்று அசத்தினர்.