ADDED : செப் 17, 2025 01:00 AM
மயிலாப்பூர்: மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலையில், நேற்று முன்தினம் இரவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், வெளிமாநில லாட்டரி துண்டு சீட்டுகள் வைத்திருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில், நந்தனத்தைச் சேர்ந்த சையத் அலி, 32, மயிலாப்பூரைச் சேர்ந்த டேவிட், 52, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 17,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.