/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ ஈஞ்சம்பாக்கத்தில் குழாய் பதிப்பு பணி அரைகுறை வாகனங்கள், பாதசாரிகள் பள்ளத்தில் சிக்கி பாதிப்பு ஈஞ்சம்பாக்கத்தில் குழாய் பதிப்பு பணி அரைகுறை வாகனங்கள், பாதசாரிகள் பள்ளத்தில் சிக்கி பாதிப்பு
ஈஞ்சம்பாக்கத்தில் குழாய் பதிப்பு பணி அரைகுறை வாகனங்கள், பாதசாரிகள் பள்ளத்தில் சிக்கி பாதிப்பு
ஈஞ்சம்பாக்கத்தில் குழாய் பதிப்பு பணி அரைகுறை வாகனங்கள், பாதசாரிகள் பள்ளத்தில் சிக்கி பாதிப்பு
ஈஞ்சம்பாக்கத்தில் குழாய் பதிப்பு பணி அரைகுறை வாகனங்கள், பாதசாரிகள் பள்ளத்தில் சிக்கி பாதிப்பு
PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM

ஈஞ்சம்பாக்கம்,
சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கம் பகுதியில், குடிநீர் வாரியம் சார்பில், ஆறு மாதங்களாக கழிவுநீர் திட்ட பணிகள் நடக்கின்றன. சில தெருக்களில் பணிகள் முடிந்தன.
பல தெருக்களில், குழாய் பதிக்க ஒன்றரை மாதத்துக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. சில தெருக்களில், அரைகுறையாக குழாயும் பதிக்கப்பட்டது. ஆனால், குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள், முறையாக மூடப்படவில்லை.
இதனால், கிளாசிக் அவென்யூ 1வது தெரு, சேரன் நகர், செல்வா நகர், ஹனுமான் காலனி, பிரார்த்தனா அவென்யூ, வெட்டுவாங்கேணி பகுதிகளில் உள்ள சாலைகள், மிக மோசமாக உள்ளன.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ஒன்றரை மாதமாக பள்ளங்கள் சீரமைக்கப் படாததால், அனைத்து வாகனங்களும் சிக்கி பாதிக்கப்படுகின்றன. இதனால், வாடகை வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவை எங்கள் பகுதிகளுக்கு வருவதில்லை. நோய் பாதித்தோர், வயதானோரை, இ.சி.ஆர்., வரை கட்டிலில் துாக்கி சென்று, பின் வாகனங்களில் ஏற்றி செல்கிறோம்.
கவுன்சிலர், குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பருவமழை துவங்கினால், பள்ளம் இருப்பது தெரியாத வகையில் மழைநீர் தேங்கி, விபத்துகள் அதிகரிக்கும். எனவே, ஆபத்தை உணர்ந்து, பள்ளத்தை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பணியை முடித்து விட்டோம் என, குடிநீர் வாரியம் தடையின்மை சான்று வழங்கினால் தான், எங்களால் சாலையை சீரமைக்க முடியும்.
'குழாய் பதிக்கும் பணியை முழுமையாக முடிக்காமல், அரைகுறையாக செய்ததால், காலதாமதம் ஏற்பட்டது. பருவ மழைக்கு முன், பள்ளத்தை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.