/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வாடகை வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.7 கோடி மோசடி செய்த பெண் கைது வாடகை வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.7 கோடி மோசடி செய்த பெண் கைது
வாடகை வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.7 கோடி மோசடி செய்த பெண் கைது
வாடகை வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.7 கோடி மோசடி செய்த பெண் கைது
வாடகை வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.7 கோடி மோசடி செய்த பெண் கைது
ADDED : செப் 18, 2025 12:39 AM

சென்னை வாடகை ஒப்பந்தம் செய்த வீடுகளை குத்தகைக்கு விட்டு, ஏழு கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை சேலையூர் மற்றும் ஊரப்பாக்கம் பகுதியில், நிதன்யா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குநர்களாக தங்கதுரை,40, இவரது மனைவி பூர்ணிமா,36, மேலாளர்களாக நளினி,33, மலர்,35 ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
இவர்கள், வாடகைக்கு மற்றும் குத்தகைக்கு வீடு எடுத்து தருவதாக விளம்பரம் செய்து, அந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, தங்களிடம் வருவோரிடம் குத்தகைக்கு வீடு எடுத்து தருவதாக ஒப்பந்தம் போட்டு, அதற்குரிய பணத்தை வசூல் செய்துள்ளனர்.
ஆனால், வீட்டு உரிமையாளர்களிடம், மாத வாடகை ஒப்பந்தம்போட்டு, அதற்கான கமிஷன் தொகையும் பெற்றுள்ளனர்.
தங்கள் வீட்டில் குடியேறியவர்கள், வாடகை தராததால் பிரச்னை எழுந்துள்ளது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளர்களும், வாடகை தாரர்களும் போலீசில் புகார் அளித்துள்ளனர். தொடர் விசாரணையில், இவர்கள் மிகப்பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை அசோக் நகரில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, தங்கதுரை உள்ளிட்டோர், 97 பேரிடம், ஏழு கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் கைதான இயக்குநர் பூர்ணிமாவை, நேற்று செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட நபர்கள் இருந்தால், இன்ஸ்பெக்டர் செண்பகதேவியின், 99944 99091 என்ற மொபைல் போண் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்; நேரிலும் புகார் அளிக்கலாம் எனவும்,போலீசார் அறிவித்துள்ளனர்.