/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வாலிபர் வெட்டி கொலை மயிலாப்பூரில் கும்பல் வெறி வாலிபர் வெட்டி கொலை மயிலாப்பூரில் கும்பல் வெறி
வாலிபர் வெட்டி கொலை மயிலாப்பூரில் கும்பல் வெறி
வாலிபர் வெட்டி கொலை மயிலாப்பூரில் கும்பல் வெறி
வாலிபர் வெட்டி கொலை மயிலாப்பூரில் கும்பல் வெறி
ADDED : டிச 02, 2025 03:59 AM
சென்னை: மயிலாப்பூரில், இரு பைக்குகளில் வந்த மர்ம கும்பலால் வெட்டப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
பட்டினப்பாக்கம், ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் அஸ்வத், 20. இவர் நேற்று முன்தினம் இரவு, மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோவில் அருகே பைக்கில் சென்றார்.
அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கும்பல், அவரை வழிமறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டியது. கோவிலுக்கு வந்த பக்தர்கள், மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த அஸ்வத்தை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அசாத் என்பவர்களை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
மயிலாப்பூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த 21ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற மவுலி என்ற ரவுடி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நடந்த 10 நாட்களுக்குள், தற்போது அஸ்வத் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


