Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் வட்ட சட்ட பணிகள் குழு நடத்தியது

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் வட்ட சட்ட பணிகள் குழு நடத்தியது

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் வட்ட சட்ட பணிகள் குழு நடத்தியது

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் வட்ட சட்ட பணிகள் குழு நடத்தியது

ADDED : ஜூலை 14, 2024 03:17 PM


Google News
உடுமலை:

உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டம் மற்றும் அடிப்படை சட்டங்கள், புகையிலை, போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நித்யகலா மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.

நீதிபதிகள் பேசியதாவது:

உலகின் தற்போதைய ஆபத்தான போதைப்பொருள், மொபைல்போன் தான். எனவே, மாணவர்கள் படிப்பை தவிர வேறு எந்த வித பயன்பாட்டிற்கும், மொபைல்போன் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். உரிய வயது வரும் வரை சமூக வலைதளங்களை பயன்படுத்த வேண்டாம்.

அனைவரும் சமூகத்தில் தங்களை சுற்றி நடக்கும் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். சினிமாவை பார்த்து புகையிலை போன்ற போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட வேண்டாம். 18 வயது பூர்த்தி அடையாமலும், ஓட்டுநர் உரிமம் பெறாமலும் வாகனங்களை இயக்க கூடாது. வாகனங்களில் சாகசம் செய்ய முயன்று வாழ்க்கையை இழந்து விட வேண்டாம்.

ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனே '1098' என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். மாணவர்கள், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதித்து நடக்க வேண்டும்.

இவ்வாறு, பேசினர்.

பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, உதவி தலைமை ஆசிரியை பிளாண்டினால் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us