/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாகன விதிமீறல் அதிகரிப்பு போலீஸ் கண்காணிப்பு தேவை வாகன விதிமீறல் அதிகரிப்பு போலீஸ் கண்காணிப்பு தேவை
வாகன விதிமீறல் அதிகரிப்பு போலீஸ் கண்காணிப்பு தேவை
வாகன விதிமீறல் அதிகரிப்பு போலீஸ் கண்காணிப்பு தேவை
வாகன விதிமீறல் அதிகரிப்பு போலீஸ் கண்காணிப்பு தேவை
ADDED : ஜூலை 14, 2024 03:17 PM
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி புறநகர் பகுதிகளில், வாகன ஓட்டுநர்களின் விதிமீறல் அதிகரித்துள்ளது; போக்குவரத்து விதிமுறை மீறுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விபத்துகளை தவிர்க்கும் வகையில், அதிக வேகமாக வாகனங்களை இயக்குதல், போதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னலை மீறிச் செல்லுதல், உரிமம் இன்றி வாகனம் இயக்குதல், ெஹல்மெட் அணியாதது உள்ளிட்ட, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மீது, போலீசாார் வழக்குப்பதிவு செய்கின்றனர்.
அதன்படி, பொள்ளாச்சி நகரில், மாதந்தோறும், அதிகப்படியான வழக்குகள் பதியப்பட்டு, அபராதமும் வசூலிக்கப்படுகிறது. போலீசாரின் இத்தகைய வாகன சோதனை மற்றும் கண்காணிப்பால், விபத்துக்களைக் குறைக்கவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் வழிவகை செய்கிறது.
இதேபோல, புறநகர் பகுதிகளிலும், வாகன ஓட்டுநர்களின் விதிமீறலைக் கண்டறிய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கூறுகையில், 'பெரும்பாலும், நகரங்களில் மட்டுமே வாகன தணிக்கை செய்யப்படுகிறது. புறநகர் பகுதிகளில் வாகனங்கள் தணிக்கை செய்யப்படாததால், விதிமீறல் அதிகரிக்கிறது.
குறிப்பாக, பைக்கில், மூன்று பேர் அமர்ந்து செல்வது, குடிபோதையில் வாகனங்கள் இயக்குவது என, விதிமீறல் தொடர்கிறது. இதனால், விபத்து அபாயம் ஏற்படுகிறது,' என்றனர்.