/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இந்துஸ்தான் மருத்துவமனையில் அரிய நோய்க்கு சிறந்த சிகிச்சை இந்துஸ்தான் மருத்துவமனையில் அரிய நோய்க்கு சிறந்த சிகிச்சை
இந்துஸ்தான் மருத்துவமனையில் அரிய நோய்க்கு சிறந்த சிகிச்சை
இந்துஸ்தான் மருத்துவமனையில் அரிய நோய்க்கு சிறந்த சிகிச்சை
இந்துஸ்தான் மருத்துவமனையில் அரிய நோய்க்கு சிறந்த சிகிச்சை
ADDED : ஜூலை 15, 2024 11:47 PM
கோவை:ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 63 வயது பெண் ஒருவருக்கு, வலது பக்க மேல் வயிற்றில் நீண்டகாலமாக வலி இருந்துள்ளது. கொல்கத்தா மற்றும் அருகிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அவர், நவஇந்தியாவிலுள்ள இந்துஸ்தான் மருத்துவமனைக்கு வந்தார்.
பொது மற்றும் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனையில், பித்தப்பையில் கல் மற்றும் பித்தநாளம் விரிவடைந்து இருந்தது.
பித்தப்பையின் மேல்பகுதி விரிவடைந்தும், முடியும் இடத்தில் சுருங்கியும், பித்தநாள நீர்க்கட்டி பிரச்னை கண்டறியப்பட்டது. நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
டாக்டர் சண்முகசுந்தரம் கூறுகையில், ''அறுவைசிகிச்சைக்குப் பின் நோயாளி நலமுடன் உள்ளார்.
இயல்புநிலைக்கு திரும்ப, வலி நிவாரணிகளும், உடற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதன்மூலம், நுரையீரல் தொற்றுகள் மற்றும் காலில் ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும். பித்தநாள நீர்க்கட்டி பிரச்னை, பெண்களுக்கே அதிகமாக வருகிறது. இது, பத்து லட்சம் பேருக்கு ஒருவர் என்ற அளவில், வரக்கூடிய அபூர்வமான நோயாகும்,'' என்றார்.