/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பி.எஸ்.என்.எல்., காட்டில் மழை 'சிம்' வாங்க பொதுமக்கள் ஆர்வம் பி.எஸ்.என்.எல்., காட்டில் மழை 'சிம்' வாங்க பொதுமக்கள் ஆர்வம்
பி.எஸ்.என்.எல்., காட்டில் மழை 'சிம்' வாங்க பொதுமக்கள் ஆர்வம்
பி.எஸ்.என்.எல்., காட்டில் மழை 'சிம்' வாங்க பொதுமக்கள் ஆர்வம்
பி.எஸ்.என்.எல்., காட்டில் மழை 'சிம்' வாங்க பொதுமக்கள் ஆர்வம்
ADDED : ஜூலை 15, 2024 11:47 PM
கோவை;கோவையில் பி.எஸ்.என்.எல்., சிம் வாங்குவதற்கு, ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
சமீபத்தில் சில தனியார் டெலிகாம் நிறுவனங்கள், தங்களது பிரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் கட்டணங்களை, உயர்த்துவதாக அறிவித்தன.
கடந்த 3ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்து, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஓரளவுக்கு இந்த விலை உயர்வை ஏற்றுக் கொண்டாலும், வாய்ஸ் காலுக்காக போனை அதிகமாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த கட்டண உயர்வு, பேரதிர்ச்சியை தந்துள்ளது.
இதையடுத்து, ஏராளமானோர் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்குக்கு மாறி வருகின்றனர். இதனால், பி.எஸ்.என்.எல்., நிறுவன புதிய சிம்கார்டுகள் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தவிர, பிற நிறுவனங்களில் இருந்தும் மொபைல் போர்டபிளிட்டி வாயிலாக, பி.எஸ்.என்.எல்.,க்கு மாறி வருகின்றனர்.
ஆங்காங்கே நடைபெறும் பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம்களில், சலுகை விலையில் புதிய இணைப்பைப் பெற, மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.