/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மக்களுடன் முதல்வர் முகாம்; 1,500 பேர் மனு கொடுத்தனர் மக்களுடன் முதல்வர் முகாம்; 1,500 பேர் மனு கொடுத்தனர்
மக்களுடன் முதல்வர் முகாம்; 1,500 பேர் மனு கொடுத்தனர்
மக்களுடன் முதல்வர் முகாம்; 1,500 பேர் மனு கொடுத்தனர்
மக்களுடன் முதல்வர் முகாம்; 1,500 பேர் மனு கொடுத்தனர்
ADDED : ஜூலை 17, 2024 12:14 AM

மேட்டுப்பாளையம்;சிறுமுகையில் நடந்த, நான்கு ஊராட்சிகளுக்கான, மக்களுடன் முதல்வர் முகாமில், 1,500க்கும் மேற்பட்ட மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, பெள்ளேபாளையம், பெள்ளாதி, சிக்காரம்பாளையம், ஜடையம்பாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு, சிறுமுகையில் முத்துசாமி திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.
முகாமுக்கு மாவட்ட ஆய்வு குழு அலுவலர் நிறைமதி தலைமை வகித்தார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சுவேதா சுமன், மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார். கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் வரவேற்றார். முகாமில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, பெள்ளேபாளையம் ஊராட்சி தலைவர் சிவக்குமார், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முகாமில், 15 அரசு துறையைச் சேர்ந்த அலுவலர்கள், தனித்தனியாக அமர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். காரமடை, சிறுமுகை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், முகாமில் பங்கேற்ற மக்களில், தேவையானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
மாலை, 3:00 மணி வரை பொதுமக்கள் வரிசையில் நின்று, கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மொத்தம், 1500 கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், பெள்ளேபாளையம் ஊராட்சியில், 2011ம் ஆண்டு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் வீட்டு மனைகள் ஒதுக்கப்படவில்லை. அதனால் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யும்படி, இலவச வீட்டு மனை பட்டா பெற்ற ஏராளமான பெண்கள், கூடுதல் கலெக்டர் சுவேதா சுமனிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை செய்து, மக்களுக்கு விரைவில் பதில் அளிக்க உள்ளனர்.