Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு மகளிர் கல்லூரியில் நாளை கலந்தாய்வு

அரசு மகளிர் கல்லூரியில் நாளை கலந்தாய்வு

அரசு மகளிர் கல்லூரியில் நாளை கலந்தாய்வு

அரசு மகளிர் கல்லூரியில் நாளை கலந்தாய்வு

ADDED : ஜூன் 27, 2024 06:10 AM


Google News
கோவை : கோவை, புலியகுளம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை நடைபெறவுள்ளது.

இக்கல்லூரியில் 2024---25ம் கல்வியாண்டின், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, மே 30ம் தேதியும், ஜூன் 11 முதல் 14ம் தேதி வரை முதல்கட்ட பொது கலந்தாய்வும் நடைபெற்றது. இதன் மூலம், 240 இடங்களில் இதுவரை 160 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

80 காலி இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை நடைபெறுகிறது. கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மாணவிகள், இணையவழியில் விண்ணப்பித்த மாணவியர் சேர்க்கை விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்த விண்ணப்ப நகல், பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, குடும்ப வருமானச் சான்றிதழ், மாணவிகளின் வங்கிக் கணக்கு புத்தகம், புகைப்படம் (2) ஆகியவற்றை அசல், நகல் என 2 நகல்கள் கொண்டு வர வேண்டும்.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு முழுவதும், இனசுழற்சி முறை, மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும். மாணவியர், தங்கள் பெற்றோரை தவறாமல் உடன் அழைத்து வர வேண்டும் என, கல்லூரி முதல்வர் வீரமணி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us