ADDED : ஜூன் 27, 2024 06:10 AM
கோவை : மழைக்காலங்களில் உபரிநீர் தடையின்றி வெளியேறும் வகையில், மதகுகளை தயார் நிலையில் வைக்க, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி, தீவிரமடைந்துள்ளது. தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாநகராட்சி சார்பில் குளங்கள், அவற்றின் நீர்வரத்து வாய்க்கால்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உக்கடம் பெரியகுளத்தில், உபரிநீர் வெளியேற ஏற்படுத்தப்பட்டுள்ள மதகுகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். மழைக்காலங்களில் அதிகளவு நீர், குளங்களுக்கு வரும் என்பதால், உபரிநீர் தடையின்றி வெளியேறும் வகையில், மதகுகளை தயார்நிலையில் வைக்க உத்தரவிட்டார்.