/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொடர்ந்து பெய்யும் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு தொடர்ந்து பெய்யும் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தொடர்ந்து பெய்யும் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தொடர்ந்து பெய்யும் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தொடர்ந்து பெய்யும் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : ஜூலை 30, 2024 02:13 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை பெய்கிறது. குறிப்பாக, கடந்த இரு வாரங்களாக, பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அவ்வபோது பெய்யும் கனமழையால், ரோட்டில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குகிறது.
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் என, பலரும் பாதிக்கின்றனர். இருப்பினும், மழையை எதிர்கொள்ள தயாராகும் மக்கள், முன்கூட்டியே குடை, ஜர்க்கின், ரெயின்கோட் உள்ளிட்டவைகளை கையோடு எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நேற்றும், பகல் முழுவதும் மழையின் தாக்கம் இருந்ததால், பலர் குடை பிடித்தும், ரெயின்கோட் அணிந்தும் அன்றாட பணிகளை தொடர்ந்தனர். இரு சக்கர வாகன ஓட்டுநர்களும் ஜர்க்கின் மற்றும் ரெயின்கோட் அணிந்தவாறு பயணத்தை தொடர்ந்தனர்.
மக்கள் கூறுகையில், 'மழையுடன் குளிரான சீதோஷ்ணம் நிலவுகிறது. காற்றின் வேகமும் அதிகமுள்ளது. காய்ச்சல், சளி பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள, உடல் சூட்டை சீராக பராமரிக்க வேண்டியுள்ளது.
அன்றாட பணிகள் பாதிக்கக்கூடாது என்பதால், பாதுகாப்புக்கு குடை பிடித்தும், ரெயின்கோட் அணிந்தும் செல்ல வேண்டியுள்ளது,' என்றனர்.