/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தெருநாய்கள் அதிகரிப்பு பொதுமக்கள் பரிதவிப்பு தெருநாய்கள் அதிகரிப்பு பொதுமக்கள் பரிதவிப்பு
தெருநாய்கள் அதிகரிப்பு பொதுமக்கள் பரிதவிப்பு
தெருநாய்கள் அதிகரிப்பு பொதுமக்கள் பரிதவிப்பு
தெருநாய்கள் அதிகரிப்பு பொதுமக்கள் பரிதவிப்பு
ADDED : ஜூலை 30, 2024 02:12 AM
வால்பாறை;வால்பாறையில் தெருநாய்களின் தொல்லையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரில், சமீப காலமாக தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. ரோட்டில் நடமாடும் நாய்கள், சில நேரங்களில் நடந்து செல்பவர்களை விரட்டுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டுகிறது. இதனால், வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
வால்பாறை நகருக்கு, ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வந்து செல்லும் நிலையில், வீதியில் விளையாடும் தெருநாய்களால், மக்கள் அலறியடித்து ஒட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில், கக்கன்காலனி, அண்ணாநகர், சிறுவர்பூங்கா, காமராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளன. தெருநாய்கள் நடமாட்டத்தால், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்து விடுகிறது. எனவே தெருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.-